IMPCOPS Recruitment 2021 72 Post – 10-ஆம் வகுப்பு தகுதிக்கு நிரந்தர அரசு வேலை

0
331

IMPCOPS Recruitment 2021 72 Post – 10-ஆம் வகுப்பு தகுதிக்கு நிரந்தர அரசு வேலை

மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருத்துவமனையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர், மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுடன் 72 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

MANAGEMENT – நிர்வாகம்: இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருத்துவமனை (IMPCOPS)

JOB DETAILS & VACANCIES – வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்:

Assistant, Clerk – 12-வது தேர்ச்சி பெற்று கூட்டுறவுத் துறை சார்ந்த டிப்ளமோ கல்வித் தகுதி பெற்றவர்கள் அல்லது ஏதேனும் துறையில் பட்டம் பெற்று கணினி அறிவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அலுவலக உதவியாளர்10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Attender Cum Driver10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Analyst (Chemistry) – வேதியியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Analyst (Microbiology) – மைக்ரோபயாலஜி துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Electrician – 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ எலக்ட்ரீசியன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Fitter – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ Fitter தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Masseur, Therapist – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று Masseur சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Male Worker – 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Medical Officer மற்றும் Medical Superintendent – சித்தா துறையில் இளநிலைப் பட்டம் அல்லது ஆயுர்வேதம் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Pharmacist (Trainee) – 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று டிப்ளமோ கூட்டுறவுத் துறை பயிற்சி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 72 காலியிடங்கள்.

AGE LIMIT – வயது வரம்பு: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே வயதுவரம்பு கொடுக்ப்பட்டுள்ளது. விரிவாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

SALARY – ஊதியம்: மாதம் ரூ.8000 முதல் ரூ.1,12,400 வரை.

APPLY LAST DATE – கடைசிநாள்: 05.04.2021

APPLICATION FEES – தேர்வு கட்டணம்: Rs.250-க்கு DD எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பிக்கும் பதவிக்குரிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய தகவல்களுடன் விண்ணப்பத்தை நிரப்பி பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும் 05.04.2021-க்குள் இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருந்தகம் மற்றும் கடைகள், 34-37 கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை, திருவான்மியூர், சென்னை – 600041. என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here