இந்த 7 காரணங்கள் அறிந்தால், நீங்களும் வங்கிவேலையில் சேர ஆசைப்படுவீர்கள்!

0
131

இந்த 7 காரணங்கள் அறிந்தால், நீங்களும் வங்கிவேலையில் சேர ஆசைப்படுவீர்கள்!

கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் வங்கித்துறை வானத்தை தொடும் அளவு வளர்ந்து வருகிறது. பணம் வைப்புத்தொகை மற்றும் பணத்தை திரும்ப பெறும் வேலைகளை மட்டும் வங்கிகள் செய்வதில்லை. அவை அதையும் தாண்டி வளர்ந்துள்ளன. பல ஆண்டுகளாக நமது பூமியானது வங்கிகளின் மேலாண்மை மற்றும் அவற்றின் செயல்பாடுகள் காரணமாக பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.

வங்கிகள் வழங்கும் திட்டங்களை எளிமைப்படுத்த பல புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது உள்ள மற்றும் பிற சலுகைகள் காரணமாக இந்திய இளைஞர்கள் அதிகம் வங்கி வேலைகளில் ஈடுப்பட நினைக்கின்றனர்.

மேலும் இது ஒரு நிலையான தொழிலாக உள்ளது. வங்கி வேலையானது ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை ஏற்படுத்தும் ஒரு தொழிலாக உள்ளது. இளம் பட்டதாரிகளுக்கு வங்கி வேலை ஏன் முக்கிய விருப்பமாக உள்ளது என்பதை விளக்கும் சில காரணங்களை இப்போது பார்க்கலாம்.

01.உங்களுக்கு ஒரு தொழில் இருக்கிறது

உங்களுக்கு எது மேல் ஆர்வம் இருந்தாலும் உங்கள் தகுதிகள் எதுவாக இருந்தாலும் உங்களுக்கான வேலை வங்கி துறையில் உள்ளது. வங்கி துறையில் உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்துள்ளன. நீங்கள் இந்த வேலைகளை பெற செய்ய வேண்டியதெல்லாம் வங்கி வேலைகள் குறித்த திறனை வளர்த்துக்கொள்வதுதான்.

ஏனெனில் திறமையான பொருளாதார வல்லுநர்கள், சந்தைப்படுத்துதல் நபர்கள், கணக்காளர்கள், நிதி ஆலோசகர்கள், மனித வள வல்லுநர்கள், ஊடகங்கள் மற்றும் அரசாங்க உறவு வல்லுநர்கள், புள்ளியியல் வல்லுநர்கள் போன்ற துறைகளில் திறமைமிக்க ஆட்களை வங்கிகள் எதிர்ப்பார்க்கின்றன.

மேலும் நிதி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் துறையில் உள்ள நிபுணர்களின் தேவையும் வங்கிகளுக்கு உள்ளது. வங்கியில் சரியான பணியை நீங்கள் கண்டறியும்போது உங்களுக்கு தேர்ந்தெடுக்க அங்கே நிறைய விருப்பங்கள் உள்ளதை காணலாம்.

02.ஒரு லாபகரமான தொகுப்பை கொண்ட சிறந்த சலுகைகள்

இந்தியாவில் வங்கி குறித்த வேலை தேடுபவர்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் பொது துறை வங்கிகள் மற்றும் அரசு வங்கிகள் இரண்டையும் உள்ளடக்கிய 27க்கும் மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களது ஊழியர்களுக்கு பெரும் சலுகைகளை வழங்குகின்றன. பயணத்திற்கான தொகை, விடுமுறைகள் இன்னும் பல சலுகைகளை ஊழியருக்கு வழங்குவதில் வங்கிகள் முதலிடத்தில் இருக்கின்றன.

மேலும் வங்கி துறையில் பணிப்புரியும் தொழில் வல்லுநர்கள் பெறும் சம்பளமானது பிற தொழிலகளில் ஊழியர்கள் பெறும் சம்பளத்தை விட அதிகமாகும். மேலும் போனஸ், சலுகைகள், மதிப்பீடுகள் போன்றவை வங்கி துறையில் நன்கு திட்டமிடப்படுகின்றன.

03.இது உலகளவில் ஒரு வலையமைப்பை கொண்டுள்ளது.

இன்றைய இளைஞர்கள் வங்கியில் ஒரு தொழிலை பெற அதிகம் விரும்ப முக்கியமான காரணம் அது உலக அளவில் வலையமைப்பை கொண்டது. நீங்கள் வங்கி உலகில் உங்கள் பார்வைகளை ஆழமாக செலுத்தினால் பல வங்கி வல்லுநர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுடன் பழகுவதை காணலாம். ஏனெனில் வங்கி வேலை காரணமாக பல முறை ஒரு வங்கி நிபுணர் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வரும். இது வங்கி நிபுணருக்கு உலகளாவிய அனுபவத்தை ஏற்படுத்தும்.

04.வலுவான பயிற்சி நடைமுறைகள்

வங்கி பணிக்கு எப்போதும் ஒரு தீவிர பயிற்சி வழங்கப்படும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கியாளர்கள் அனைவரும் மற்றவர்களிடம் அதிகம் இல்லாத சில திறன்களை பெற்று காணப்படுகின்றனர்.

அவர்கள் புத்திசாலித்தனம், நன்கு படித்தவர்கள். மேலும் கணக்கியல் துறை, காசாளர் குழு, பதிவு பராமரிப்பு துறை போன்றவற்றில் பணியாற்றுவதற்காக பணியாளர்கள் தொழில் நீதியாக பயிற்சியளிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் அதிக வளமான சிந்தனை மற்றும் உற்பத்தி திறனை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

05.பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பு

வங்கியாளர்கள் மற்றும் அவர்களின் நிபுணத்துவமானது நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் நிதிகளை கவனத்தில் கொண்டே அரசாங்கத்தின் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் வங்கி மற்றும் வங்கி வேலைகள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என அழைக்கப்படுகிறது.

மேலும் வங்கியானது இந்தியாவில் வசிக்கும் மற்றும் வருமானம் ஈட்டும் நபர்கள் இந்திய பொருளாதாரத்தின் முன்னேற்றத்திர்கு பங்களிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் வங்கி ஊழியர் பொதுமக்கள் இருவருமே நாட்டின் பொருளாதாரத்திற்காக வேலை செய்கின்றனர்.

06.அதிக வளர்ச்சி விகிதம்

மற்ற எந்த ஒரு துறையை விடவும் வங்கி துறையில் அடிக்கடி தொழில் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படுகிறது. பாலினம், வயது, இனம் மற்றும் உடல் திறன்கள் என பாரபட்சம் பார்க்காமல் வங்கிகள் தனி நபர்களை வேலைக்கு அமர்த்தி பயிற்சி அளிக்கின்றன. தொடர்சியான கடின உழைப்பால் ஒரு இளைய அதிகாரி சில ஆண்டுகளிலேயே மேலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவியை அடைய முடியும். மேலும் வங்கி வேலைகள் பாதுக்காப்பானதாக இருக்கின்றன.

07.மந்த நிலையற்ற ஒரு தொழிலாகும்.

தொழிலில் பிற துறைகளுடன் ஒப்பிடுகையில் வங்கியில் தொழில் மந்தநிலை ஏற்படும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. வங்கிகள் நாட்டின் முதுகெலும்புகளாக உள்ளன. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வங்கிகள் முக்கிய பங்களிக்கின்றன. இந்தியா போன்ற ஒரு வளரும் நாடு வங்கிகளின் நடவடிக்கைகள் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளது.

உலகளாவிய அளவில் மந்த நிலை ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்படும் துறைகளில் வங்கிகளும் ஒன்றாகும். ஆனால் உலகளாவிய மந்த நிலையில் கூட உலகெங்கும் உள்ள வங்கிகளே தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதுக்காக்கும் தூணாக நிற்கின்றன. இதே போல இந்திய வங்கிகளும் இருப்பதால் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்புகள் வராமல் அவை பார்த்துக்கொள்கின்றன.

வங்கி வேலைகளை பெறுவது கடினமான வேலை அல்ல. இந்த தொழில் மூலம் அவர்கள் அதிகமான நன்மையை பெறுகின்றனர். பலருக்கு வங்கியில் ஒரு தொழிலை மேற்கொள்வதன் மூலம் அவர்கள் தங்களை நிலை நிறுத்துவதற்கான அடிப்படை நுண்ணறிவை பெறுகின்றனர்.

மேலும் வங்கி தேர்வுகளை கையாள பணியில் சேர விரும்புபவர்களுக்கு ஏராளமான ஆவணங்கள் இணையம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றை கொண்டு வங்கி வேலைக்கு செல்பவர்கள் பயனடையலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here