ஊழியர்களை தக்கவைத்து கொள்ள சலுகைகள் வழங்குவது ஒரு முக்கிய காரணியாக உள்ளது. அதில், கூகுள் பெரிய அளவை எட்டியுள்ளது. டைம்ஸ்ஜோப்ஸ் நடத்திய ஆய்வில், கூகுள் சம்பளம் தவிர பணியாளர்களுக்கு பெரும்பாலான சலுகைகள் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

இதனால், அந்த குறிப்பிட்ட நிறுவனம் பணியாளர்களுக்கு பிரபலமானதாக உள்ளது. அந்நிறுவனத்தில், உணவு வழங்குதல், சுத்தத்தை கடைபிடித்தல் போன்றவை ஊழியர்களை கவருகிறது. எனவே வேலைக்கு தகுதி பெறாதவர்களும், கூகுளில் ஒரு பணி அனுபவம் பெற முயற்சிக்கின்றனர்.

ஜாப் பஸ்ஸின் பணியாளர், பயிற்சி தளமான டைம்ஸ் ஜோப்ஸ் கூகுள் தனது ஊழியர்களுக்கு வழங்கும் அசாதாரண சலுகைகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூகுள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகள்
கூகுளின் சிற்றுண்டிச்சாலையில், நாள்தோறும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல உணவுகள் வழங்கப்படுகிறது. அதன் சுவையும் வல்லுநர்கள் கொண்டு ஆராயப்படுகிறது. அங்கு உணவு இலவசமாகவே வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஜூஸ் மற்றும் காஃபி குடிக்க தனி பார்க்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதிகம் கற்கலாம்.
தற்போதைய மற்றும் முன்னாள் கூகுள் ஊழியர்களின் தகவல்படி, ஊழியர்களுக்கு நாள்தோறும் கற்றலுக்கான சூழலும், ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பல பிரபலங்கள், சிந்தனையாளர்கள், தலைவர்களுடன் பேசவும் அடிக்கடி வாய்ப்பு கிடைப்பதாகவும் கூறியுள்ளனர்.

குழந்தைப்பேறு கால சலுகைகள்
புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கு 22 வாரங்கள் வரை ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் குழந்தையின் தந்தை அல்லது வளர்ப்பு பெற்றோராக இருந்தால் அவர்களுக்கு ஏழு முதல் 12 வாரங்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி பணியிடத்தில் குழந்தைகள் பராமரிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பணியாளர்களுக்கு இலவச உடற் பயிற்சி
கூகுளில் பணி செய்பவர்களுக்கு இலவச உடற் பயிற்சி வழங்கப்படுகிறது. அதேபோல், பணியில் சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பினால் அதற்கான சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

பயிற்சி மற்றும் மேம்பாடு
கூகுள் உள்ள கலாச்சாரம் மற்றும் கருத்துக்கள் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும், அதற்கான பயிற்சிகளும் ஆண்டுக்கு இருமுறை வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here