நீங்கள் வேலை தேட துவங்குகிறீர்கள் என்றாலே உங்கள் பெற்றோர்கள், பக்கத்து வீட்டில் உள்ளவர்களில் துவங்கி தூரத்தில் உள்ள அத்தை வரை அனைவரும் உங்களுக்காக சில ஆலோசனைகளை கைவசம் வைத்திருப்பர். எனவே அதில் உங்களுக்கு தேவையான ஆலோசனைகளை மட்டும் நீங்கள் பயன்படுத்தி கொள்வது நல்லது.

01.குறிக்கோளை மாற்றியமைக்க வேண்டும்
பணியமர்த்தும் நிறுவனங்கள் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை அறிய விரும்பவில்லை. மாறாக உங்களால் என்ன செய்ய முடியும். உங்களால் நிறுவனத்தின் மதிப்பு எவ்வாறு அதிகமாகும் என்பதை அறியவே அவர்கள் விரும்புகிறார்கள். எனவே உங்களது சுய விவர விண்ணப்பத்தில் உங்களது குறிக்கோளை குறித்து எழுத தேவையில்லை.

02.சம்பளத்தை மறைக்கவும்
சம்பளம் குறித்து நீங்கள் உங்களது சுய விவர குறிப்பில் குறிப்பிடுவதாக இருந்தால் விண்ணப்பத்தின் இறுதியில் குறிப்பிடுங்கள். ஆனால் சம்பளம் குறித்த கேள்வி என்பது முக்கியமான கேள்விதான் என்றாலும் ஒரு பேச்சுவார்த்தை மூலமே அதை பற்றி பேச வேண்டும். எனவே சம்பள விஷயத்தை சுய விவர விண்ணப்பத்தில் சேர்ப்பதை காட்டிலும் அதை பற்றி நேரில் பேசுவதே சிறந்தது.

03.பல பதவிகளுக்கு விண்ணப்பித்தல்
உங்கள் தேடல் குறித்த சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆன்லைனில் வேலை குறித்து விண்ணப்பிக்கும் போது உங்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களில் தொடர்புடைய பதவிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம். இதனால் உங்களுக்கு நேர விரயம் ஏற்படாது.இதனால் நீங்கள் எளிதாக உங்களுக்கு தொடர்பான வேலைகளை மட்டும் தேட முடியும்.

04.சுய விவர விண்ணப்பத்தின் அளவை குறைக்கவும்
உங்கள் சுய விவர விண்ணப்பமானது தேவையான தகவல்களுடன் நீங்கள் எழுதும்பட்சத்தில் அது மற்றொரு பக்கத்தை எடுத்துக்கொண்டால் பரவாயில்லை. ஆனால் தேவையற்ற தகவல்களை நிரப்பி விண்ணப்பத்தை இரண்டாவது பக்கத்திற்கு கொண்டு செல்ல கூடாது. அதை சரிப்பார்த்துக் கொள்ளவும்.

05.பின்னர் அழைப்பது குறித்து கேட்க வேண்டாம்
நீங்கள் எங்காவது வெளியில் செல்லும்போது அல்லது பாத்ரூமில் இருக்கும் போது உங்கள் நேர்காணலுக்கான அழைப்பு வரலாம். அப்படி அழைப்பை பெறும்போது இப்போது பேச முடியாது. என்று நீங்கள் கூறினால் அது தவறு கிடையாது.

06.கவர் லெட்டரை தவிர்க்கவும்
கவர் லெட்டர் என்பது மற்றவர்களை காட்டிலும் உங்களை ஒரு படி மேலே காட்ட உதவும் விஷயமாகும். எனவே அதை நிராகரிக்க வேண்டாம். ஆனால் நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை தொடர்பாக அதை மாற்றி அமைத்து விடுங்கள்.

07.இணையத்தில் வேலை கிடைக்காது
இணையத்தில் வேலை தேடினால் வேலை கிடைக்காது என பலர் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் டைம்ஸ் ஜாப்ஸ், லிங்குடு இன் போன்ற பல தளங்கள் உங்களுக்கு வேலையை தேடி தரும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளன. அவை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

#Job Tips in Tamil 2020

All the Best..!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here