Govt Job Today என்ற அமைப்பானது தமிழில் வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கும் ஒரு சிறிய அமைப்பாகும். எங்கள் அமைப்பில் கிட்டத்தட்ட ஒரு 10 நபர்கள் ஒன்றாக கூடி பல்வேறு வேலைவாய்ப்பு தகவல்களை நமது தாய்மொழியில் வழங்கிக் கொண்டிருக்கிறோம். தற்போது புது முயற்சியாக அரசு மற்றும் இதர வேலைவாய்ப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொடுக்கும் புது சேவையினை தொடங்கியிருக்கிறோம்.
முதலில் இச்சேவையினை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…
சுருக்கமாக சொல்லப்போனால் அரசு மற்றும் இதர வேலைவாய்ப்பு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றைய காலகட்டத்தில் எல்லாம் கணினி மயமாக மாறிவிட்டது. நீங்கள் விண்ணப்பிக்க நினைக்கும் ஏதேனும் ஒன்று அல்லது பல வேலைவாய்ப்புகளுக்கு நீங்கள் தனித்தனியே உங்களது சான்றிதழ்கள் எடுத்து ஏதாவது கணினி மையங்கள் அல்லது ஏதேனும் பிரவுசிங் சென்டர்கள் சென்று விண்ணப்பிப்பீர்கள்.
இவ்வாறு நீங்கள் ஒவ்வொரு பணிகளுக்குமே தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டி வரும். அப்படி விண்ணப்பிக்கும் போது உங்களுக்கு விண்ணப்ப கட்டணம் தவிர்த்து கூடுதலாக ரூபாய் 50 முதல் 100, 150 என 200 வரை கூடி உங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் செய்து கொள்வார்கள். உதாரணமாக TNPSC ஏதேனும் ஒரு தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் என வைத்துக்கொள்வோம். கணினி மையம் நடத்துபவர் விண்ணப்ப கட்டணம் 100 + சர்வீஸ் சார்ஜ் 150 என மொத்தம் 250 ரூபாய் என வாங்கிக் கொள்வார்கள்.
உடனே உங்களுக்கு கேள்வி வரும். நீங்கள் எப்படி எங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று?
நீங்கள் ஒரு முறை உங்கள் கல்வித்தகவல்கள் எங்களுக்கு அளிப்பதன் மூலம் அரசினால் வெளியிடப்படும் அனைத்து விதமான வேலைவாய்ப்புகளில் நீங்கள் விண்ணப்பிக்க நினைக்கும் வேலைக்கு மிக மிக குறைந்த சர்வீஸ் சார்ஜ் மூலம் எளிதாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இச்சேவையின் சிறப்பம்சங்கள்
1. உங்களது சந்தேகங்களை எங்கள் மொபைல் எண்ணுக்கோ அல்லது வாட்சப் குழுவிலோ கேட்க முடியும்.
2. ரிஜிஸ்டர் செய்வதற்கு மிகக்குறைந்த கட்டணம் மட்டுமே.
3. ஏதேனும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்தால் உங்கள் மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் உடனே அனுப்பி வைக்கப்படும்.
4. சர்வீஸ் கட்டணம் மிக மிக குறைவு.
5. ஒரு முறை பதிவு செய்தால் போதும் அனைத்து விதமான வேலைவாய்ப்புக்கும் விண்ணப்பிப்பது மிகவும் எளிது.
6. உங்கள் பொன்னான நேரம் பாதுகாக்கப்படும்.
இதனால் எங்களுக்கு என்ன பலன்?
இவ்வாறு நீங்கள் எங்களது அமைப்பில் இணைந்து விண்ணப்பிக்கும் போது அதில் கிடைக்கும் பணத்தை எங்கள் குழு மூலம் ஆதரவற்ற இல்லங்களுக்கு எங்களால் முடிந்த உதவியை மாதம் ஒரு முறை கொடுக்க முடியும்.
இதற்கு உங்களது ஆதரவும் எப்பொழுதும் எங்களுக்கு தேவை..!!!
எப்படி ரிஜிஸ்டர் செய்வது?
1. முதலில் பதிவுக் கட்டணம் ரூ.50 மட்டும் செலுத்த கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
லிங்க் – கிளிக் செய்யவும்.
2. பதிவுக்கட்டணம் செலுத்தியதை Screenshot எடுத்துக்கொள்ளவும்.
3. பிறகு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் தகவல்களை பதிவு செய்யவும்.
Google Form Link : https://forms.gle/zPgLuyvYrQMsfbvo6
2. அதில் கேட்டிருக்கும் தகவல்கள் கொடுக்கவும். (உங்களது அதிகபட்ச கல்வித்தகுதி எவ்வளவோ அதை கொடுத்தால் மட்டுமே போதுமானது அனைத்து தகவல்களும் கொடுக்க அவசியம் இல்லை) (*-குறிப்பிட்டுள்ளவை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்).
3. அனைத்து தகவல்களையும் சமர்பித்த பின் உங்கள் மெயில் முகவரிக்கு பதிவுசெய்ததற்கான நிரந்தர பதிவெண் (Register Number) அனுப்பி வைக்கப்படும்.
4. அந்த நிரந்தர பதிவெண்ணை நீங்கள் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
5. பிறகு நீங்கள் விண்ணப்பிக்கும் நினைக்கும் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் எங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://govtjob2day.in/?page_id=53811 என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளவும்.
6. விண்ணப்பிக்க வேண்டிய பணிக்குரிய கட்டணத்தை செலுத்தியபிறகு உங்கள் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு நீங்கள் விண்ணப்பிக்க தேர்வு செய்த பதவிக்கு விண்ணப்பித்து உங்கள் மெயிலுக்கு அதற்கான ஆதாரமாக விண்ணப்பம் PDF பைலாக அனுப்பி வைக்கப்படும்.
(Note: உங்கள் கல்வி சார்ந்த தகவல்கள் வேலைவாய்ப்பு சம்பந்தமான பயன்பாட்டுக்கு மட்டுமே பெறப்படுகிறது. தவறான நோக்கத்திற்கு அல்ல)
Government jobs
Bernard hospital assistant posted
Nothing
I got what you intend,bookmarked, very decent website.